அடிக்கடி சிறுநீர்… பிறப்புறுப்பில் தீ வைத்த பெண் : அதிர்ச்சி சம்பவம்!!

1356

கர்நாடகா….

கர்நாடகா மாநிலம் தம்குர் மாவட்டம் கோட்கேர் கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுவனை அவரது பாட்டி அங்குள்ள அங்கன்வாடிக்கு தினமும் கொண்டு வந்து விட்டு பின்னர் மாலை வீட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட சிறுவன் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அவனை சோதனை செய்தபோது குழந்தையின் ஆணுறுப்பில் தீ காயம் இருந்துள்ளது.

பதறிப்போன மூதாட்டி இதுகுறித்து அங்கன்வாடி ஆசிரியையிடம் கேட்டபோது, அவர்தான் குழந்தையின் பிறப்புறுப்பில் நெருப்பை வைத்தது தெரிய வந்தது. மேலும், பாதிக்கப்பட்ட குழந்தை ஆசிரியையின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டதாகவும் அதனால் வத்திக்குச்சியை பற்ற வைத்து பிறப்புறுப்பில் காட்டியதாகவும் கூறியுள்ளார்.

குழந்தைக்கு அடிக்கடி சிறுநீர் போகும் பிரச்சினை இருப்பது அந்த ஆசிரியைக்கு தெரிந்திருந்தும் மனசாட்சியே இல்லாமல் பிறப்புறுப்பில் தீயை வைத்த கொடூர பெண்மணியின் செயலை அங்கன்வாடி அதிகாரிகளுக்கு அந்த மூதாட்டி தெரியப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஆசிரியையிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் 15 நாட்களுக்கு முன்புதான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இந்நிலையில், குழந்தை தனது தந்தை மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.