அண்ணனை கடப்பாரையால் அடித்து கொன்ற தம்பி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

467

மயிலாடுதுறை…..

மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் குமார். அவரது தம்பி வீராச்சாமி. இருவரும் கொத்தனார் வேலை பார்த்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே குடும்ப தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் உறவினர் வினோத் என்பவர் வீட்டில் மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது குமார் மற்றும் அவரது தம்பி வீராச்சாமிக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீராச்சாமி தனது அண்ணன் குமாரை கடப்பாறையால் தலையில் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இறந்த குமாரின் மனைவி ராதிகா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீராசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுபோதையில் தம்பி அண்ணனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.