அண்ணியுடன் கள்ளக்காதல்… உல்லாசமாக இருந்த ஜோடிக்கு ஏற்பட்ட விபரீதம்!!

1572

செங்கல்பட்டு…..

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சிலவாட்டம் கிராமம் பகுதிக்கு அருகில் அடர்ந்த மரங்கள் உள்ளன. அங்குள்ள வேப்ப மரத்தில் ஆண், பெண் இருவர் தூக்கில் சடலமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்த ஆண், பெண் இருவரது சடலங்களை கைப்பற்றினர்.

பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், ஆண் பெயர் அருள்ஜோதி (23) என்பதும், பெண்மணி முத்துலட்சுமி (35) என்பதும் தெரியவந்துள்ளது. இருவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

முத்துலட்சுமியின் கணவருக்கு அருள்ஜோதி பெரிப்பா மகன், அருள் ஜோதி சிறிய பையன் என்பதால் அருகில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அருள்ஜோதிக்கும் முத்துலட்சுமிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு அடிக்கடி வீட்டுக்குளேயே உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது குடும்பத்தாருக்கு தெரிய வர இருவரையும் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மதுரையிலிருந்து, காணாமல் போன இருவரும் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகாத உறவினால் இருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.