அதை பெரிதாக்கினால் போதும்… இவர்களை கவர்ந்து விடலாம்: தீபிகா படுகோனின் பளீர் பேச்சு!

666

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனேயிடம் நடிக்க வந்த புதிதில் உங்களுடைய மார்பகத்தை பெரிதாக ஆக்கிக் கொள்ளுமாறு பலர் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் தீபிகா படுகோனே, ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்துள்ளார். ஆனால் ப்ரியங்கா சோப்ரா போன்று அவரால் ஹாலிவுட்டில் ஜொலிக்க முடியவில்லை. இதையடுத்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், சினிமா பற்றி தீபிகா கூறியதாவது.. :-நான் நடிக்க வந்த புதிதில் செயற்கை முறையில் எனது மார்பகங்களை பெரிதாக்குமாறு பலர் அறிவுரை வழங்கினார்கள். பெரிய மார்பகங்கள் இருந்தால் தான் பாலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்றார்கள்.

ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தால் பாலிவுட் பிரபலங்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்றார்கள். பட வாய்ப்புக்காக நான் என் மார்பகங்களை பெரிதாக்க விரும்பவில்லை.

மார்பகம் மட்டும் இல்லை பல விஷயங்களை செயற்கையாக மாற்றுமாறு எனக்கு அறிவுரை வழங்கப்பட்டது. என் திறமைக்காக தான் வாய்ப்பு கிடைக்க வேண்டுமே தவிர நான் செயற்கையாக என் உடலில் மாற்றம் செய்வதற்காக அல்ல என்பதில் தெளிவாக இருந்தேன்.

அத்துடன், நான் மனஅழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு குணமடைந்தேன். மனஅழுத்தத்தை கவனிக்காமல் விட்டால் தற்கொலை செய்யத் தோன்றும். நல்ல வேளை எனக்கு மனஅழுத்தம் இருந்தது ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டது என்று கூறியுள்ளார் தீபிகா.