அந்த சேலை எனக்கு பிடிக்கவில்லை : மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்த மணமகன்!!

619

சேலை எனக்கு பிடிக்கவில்லை..

இந்தியாவின் கர்நாடகாவில் மணமகளின் சேலை பிடிக்கவில்லை எனக்கூறி மணமகன் ஓட்டம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவின் ஹாசன் நகரில் ரகுமார் மற்றும் சங்கீதா இருவருக்கும் திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதன்படி திருமணத்திற்கு முதல்நாளன்று மணமகன் வீட்டார் மண்டபத்திற்கு வந்துள்ளனர். அதன்பின்னர், திருமண நாளன்று மணமகளுக்காக வாங்கியிருந்த சேலை சரியில்லை என கூறி அதை உடனடியாக மாற்றுமாறு கூறியுள்ளனர்.

இதை மணமகள் வீட்டார் ஏற்காதது போல் தெரிகிறது, இதில் நடந்த வா க்குவாதத்தில் மணமகன் வீட்டார் அன்றிரவே மண்டபத்தை விட்டு ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது.

ஏதோ ஏதோ காரணத்திற்காக திருமணம் நிற்கும் நிலையில், சேலை சரியில்லை என கூறி திருமணம் நின்ற விவகாரம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.