அம்பானி வீட்டு திருமணத்தால் நடந்த சாதனை!!

856

அம்பானி வீட்டு திருமணம்

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் மும்பையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அஜே பிரமல் மகன் ஆனந்த் பிரமல் ஆகிய இருவருக்கும் டிசம்பர் 12-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்துக்கு முன்பாக 8 மற்றும் 9ம் தேதிகளில் உதய்பூர் நகரில் பிரமாண்டவகையில், திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றன.இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுதேசி பஜாரில் 108 பாரம்பர்ய இந்திய கைவினைப் பொருள்கள் அடங்கிய மிகப்பெரும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மும்பை விமான நிலையம், அம்பானி இல்லத் திருமணத்தை முன்னிட்டு, ஒரே நாளில் 1,004 விமான சேவைகளைக் கையாண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இதற்கு முன்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரே நாளில் 1,003 விமான சேவைகளை (புறப்பாடு மற்றும் வருகை) கையாண்டது சாதனையாக இருந்து வந்தது.