காதலுக்கு கண்ணில்லை
‘Love is Blind’ என்பதை திரையுலக பிரபலங்கள் பலர், தங்கள் இல்லற வாழ்வில் அழகு, வயதை தாண்டி மனதிற்கு முக்கியத்துவம் அளித்து திருமணம் புரிந்து நிரூபித்துள்ளனர். அவ்வாறு நிரூபித்த இந்திய பிரபலங்கள் குறித்து இங்கு காண்போம்.
ஸ்ரீதேவி-போனி கபூர் : இந்தியாவின் கனவுக்கன்னியாக இருந்த ஸ்ரீதேவி, ஏற்கனவே திருமணமானவரும், தன்னை விட வயதில் அதிகம் மூத்தவருமான போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தேவயானி-ராஜகுமாரன் : தமிழில் அதிகம் நடித்து மிகவும் புகழ்பெற்ற நடிகையான தேவயானி, இயக்குநரான ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ராணி முகர்ஜி-ஆதித்தியா சோப்ரா : ஹிந்தியில் அழகு ராணி என்று பெயர் பெற்ற நடிகை ராணி முகர்ஜி. ஆனால், இவரை விட முதிர்ச்சியான தோற்றம் அளிக்கும் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்துகொண்டார்.
கருணாஸ்-கிரேஸ் : நகைச்சுவை நடிகரும், அரசியல் பிரமுகருமான கருணாஸ், கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது காதல் இசை மூலம் இணைந்ததாக கூறப்படுகிறது.
பராகான்-ஷிரிஷ் குந்தர் : இயக்குநர் பராகான் உடல் தோற்றத்தில் சற்று பருமனாக இருந்தாலும், ஷிரிஷ் என்பவர் அன்பை மட்டுமே எதிர்பார்த்ததால் இருவரும் திருமணத்தில் இணைந்தனர்.
அட்லி-ப்ரியா : இயக்குநர் அட்லி, சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். காதலுக்கு நிறம் முக்கியமல்ல என்பதை நிரூபித்த ஜோடி இது.
துலிப் ஜோஷி-வினோத் நாயர் : ஹிந்தி நடிகை துலிப் ஜோஷி, இவரை விட முதிர்ச்சியான தோற்றமளிக்கும் வினோத் நாயரை திருமணம் செய்துகொண்டார்.
சிமோன் சிங்-ஃபாஹாத் : மற்றொரு ஹிந்தி நடிகையான சிமோன் சிங், ஃபாஹாத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சஞ்சய் தத்-மன்யாத்தா : நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி அவரை விட சற்று வயதானவர் போல் தெரிந்தாலும், இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
பக்ரூ-காயத்ரி – காதலுக்கு கண்ணில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் நடிகர் பக்ரூ-காயத்ரி ஜோடி தான். நகைச்சுவை நடிகரான பக்ரூ, தென்னிந்தியாவில் பிரபலமான நடிகர் மற்றும் கின்னஸ் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.