அழுக்கு துணி, சடை விழுந்த முடி, கையில் ஊசியுடன் திரியும் மர்ம நபர் : பீதியில் மக்கள்!!

696

தமிழகத்தில் நபர் ஒருவர் கையில் ஊசியுடன் உலா வருவதால், அப்பகுதியில் இருக்கும் மக்கள் பீதியில் உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் எதிரில், நபர் ஒருவர் அழுக்கு துணி, சடை விழுந்த முடி, மெலிதான உடம்பு, கறுத்த நிறம், ஆனால் தெளிவில்லாம, ஒரு மனநோயாளி போன்று கையில் ஒரு ஊசியை வைத்து கொண்டு பிச்சை எடுத்து வருகிறார்.

பார்க்க அவர் ப ரிதாபமாக இருப்பதால், அவருக்கு பிச்சை போட வருபவர்கள் கூட, அவர் வைத்திருக்கும் ஊசியை பார்த்து பயந்து ஓடுகின்றனர்.

ஆனால் யாரையும் இவர் தற்போது வரை எதுவுமே செய்வதில்லை, ஊசியால் குத்திவிடுவேன் என்று மி ரட்டுவதும் இல்லை, வழக்கமாக பார்க்கும் நபர்களுக்கு, இவரைப் பற்றி தெரியும் என்றாலும், வெளியூரில் இருந்து வருபவர்கள் இவரை கண்டவுடன் அ லறி ஓடுகின்றனர்.

இப்படி மனநோயாளிகள் சேலத்தில் மட்டுமல்ல, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலும் இப்படி மனநோயாளிகளாக திரிபவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏதோ ஒரு அசம்பாவிதத்தினால், மூளை கெட்டு, இப்படி மனநோயாளிகளாகி விடும் இவர்களை குடும்பத்தினர் தனியே விட்டுவிடுகிறார்கள்.

மருத்துவம் பார்க்க வழியில்லாமல் தமிழ்நாட்டு பக்கம் செல்லும் லாரிகளில் ஏற்றி இறக்கிவிட்டு விட சொல்கிறார்கள். இங்கே தமிழகத்தில் இவர்கள் மொழி தெரியாமல்.. குளிர், வெயில், பனி, மழையில் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.