ஆயுதபூஜை முடிந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : நடந்தது என்ன?

1508

கடலூர்…..

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் ஞானவினாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் பரசுராமன். இவர் புதுக்கோட்டையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார்.இவருக்கும் சீர்காழி பகுதியை சேர்ந்த பிரவீனாவுக்கும் (26) திருமணமாகி 18 மாதங்கள் ஆகின்றன.

இந்த நிலையில் இவர்களுக்கு 11 மாதத்தில் ஹரிமித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவர் பரசுராம் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதால் பிரவீனா அவரது மாமனார் முருகேசன் மாமியார் விஜயாவுடன் ஒரே வீட்டில் தங்கி வந்தார்.

இந்நிலையில் ஆயுதபூஜையை முன்னிட்டு படைப்பதற்கு கடைத்தெருவுக்கு சென்று பொருட்கள் வாங்கி வீட்டிற்கு வந்த பிரவீனா தனது கணவருக்கு போன் செய்து விட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனடியாக பெண்ணின் உறவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த பெண்ணின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி ரூபன் குமார் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

அதனையடுத்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திருமணமாகி 18 மாதங்களே ஆகியுள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.