ஆயுள் த ண்டனை கு ற்றவாளியை சிறையில் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!!

382

சிறையில் திருமணம்

ஆயுள் த ண்டனை அனுபவித்து வரும் கு ற்றவாளியை இளம்பெண் ஒருவர் சிறையில் வைத்து திருமணம் செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பவந்தீப் கவுர் என்கிற இளம்பெண் மந்தீப் சிங் என்பவரை 2016ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் இரட்டைக் கொ லை வழக்கில் கைது செய்யப்பட்ட கு ற்றவாளி மந்தீப் சிங்கிற்கு ஆயுள் த ண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால் இருவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண வேலைகள் திடீரென தடைப்பட்டன. இதனையடுத்து மந்தீப் சிங்கின் புகைப்படத்தை திருமணம் செய்துகொண்டு பவந்தீப் கவுர், தனது மாமியாருடன் வசித்து வந்துள்ளார்.

மேலும், காதலனை திருமணம் செய்துகொள்ள பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் மதம் மந்தீப் சிங் சார்பில் நீதிமன்றத்தில் திருமணம் செய்துகொள்ள அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதனை நிராகரித்த இரட்டை நீதிபதிகள் கொண்ட அமர்வு, பலத்த பா துகாப்புகளுடன் கூடிய நாபா மத்திய சிறை வளாகத்தில் இருவருக்குமான திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை 9.10 மணியளவில், மணமகள் தனது குடும்பத்தினருடன் சிவப்பு காரில் சிறைச்சாலையை வந்தடைந்தார். அனைவரும் ப லத்த சோ தனைகளுக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

திருமண நிகழ்வில் மொத்தம் 8 பேர் கலந்துகொண்டனர். காலை 11:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை திருமணத்திற்கான சடங்குகள் நடந்து முடிந்தன. அதன்பிறகு மணமகள் மீண்டும் காரில் வீட்டிற்கு திரும்பிவிட்டார்.

இந்த நிலையில் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. பாட்டியாலா மாவட்டத்தில் உயர் பா துகாப்பு கொண்ட நாபா சிறைக்குள் திருமண விழா நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.