ஆர்யா தான் வேண்டும் என அடம்பிடித்த அபர்ணதி : ஆர்யாவின் திருமணம் குறித்து வெளியிட்ட உண்மை!!

670

ஆர்யாவின் திருமணம்

தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராகிய ஆர்யாவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே வெளிவந்தது. இதற்காக ஒரு தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தியும் பெண் அமையவில்லை.

இந்த நிலையில் நடிகை சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்யவுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இவர்கள் இருவருக்குமிடையே கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டதாகவும், மார்ச் மாதம் இவர்களது திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அபர்ணதி. தற்போது சில படங்களில் நடித்து வருகின்றார். இவர் ஆர்யாவின் திருமணம் குறித்து கேட்டதற்கு அது வதந்தியாகத் தான் இருக்கும். அவ்வாறு உண்மை என்றால் நடிகர் விஷால் கூறியது போன்று இவரும் கூறியிருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது உண்மையாகிவிட்டால் என்ற கேள்விக்கு… அபர்ணதி இது உண்மையாக இருக்காது… நான் ஆர்யாவிடம் கேட்டால் இதெல்லாம் நம்புகிறாயா என்று தான் கேட்பார். இந்த விடயத்தில் உண்மை தெரிய வேண்டுமென்றால் நடிகை சாயிஷாவைக் கேட்டால் மட்டுமே தெரியும் என்று கூறியுள்ளார்.