இங்கிலாந்தில் தனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார்.
Sultana Akter (39) என்ற பெண்மணிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். இவர் கருவுற்று 26 வாரமாகியுள்ளது. இந்நிலையில், இவரது அண்ணன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைகேட்டு அதிர்ச்சியடைந்தவர், தலைசுற்றுவதாக கூறி அப்படியே கீழே அமர்ந்துள்ளார், அதனைத்தொடர்ந்து தனக்கு வலி எடுப்பதாக இவர் கூறியதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவர் சுயநினைவை இழந்த காரணத்தால், அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். ஆனால், Sultana Akter நினைவு திரும்பாமல் உயிரிழந்துள்ளார். பிறந்த குழந்தையும் சுமார் 15 நிமிடங்களுக்கு எவ்வித உணர்வும் இன்றி இருந்து அதன்பின்னர் அழ ஆரம்பித்துள்ளது.
இருப்பினும் இக்குழந்தையும் சிறிது நேரம் கழித்து இறந்துவிட்டது. இப்பெண் உயிரிழந்தபோது இவரது கணவர் வங்கதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்துள்ளார். இந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளார்.