இடையூறாக இருந்த கணவரை 33 நாட்கள் கோமாவுக்கு அனுப்பி கொன்ற மனைவி : வெளியான திடுக்கிடும் தகவல்!!

1102

மகாராஷ்டிரா….

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் பகுதியில் சதீஷ் கேசவரா தேஷ்முக் , தனது மனைவி, மகனுடன் வசித்து வந்துள்ளார். டாக்டரான தேஷ்முக்கின் மனைவி சுகாசினியும் டாக்டர்.

சுகாசினியின் நடத்தையில் தேஷ்முக்கிற்கு அண்மைக்காலமாக சந்தேகம் இருந்து வந்துள்ளது. அதை உறுதிப்படுத்துவதற்காக கடந்த செப்டம்பர் பத்தாம் தேதி திடீரென்று மருத்துவமனைக்குச் சென்ற போது அங்கே சுகாசினியும் அவரது கள்ளக்காதலன் அருண் காண்டேகரும் மருத்துவமனையில் அருகருகே அமர்ந்து இருந்திருக்கிறார்கள்.

அப்போது கள்ளக்காதல் குறித்து தேஷ்முக் கேட்டபோது மூன்று பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. உடனே சுகாசினியின் கள்ளக்காதலன் இந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றிருக்கிறார். அதன் பின்னர் கணவர் தேஷ்முக்கை மருத்துவமனையின் கழிவறை அருகே அழைத்துச் சென்று அங்கே நின்று பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.

சுகாசினியும் டாக்டர் என்பதால் கணவனை இதற்கு மேல் உயிருடன் வைத்திருந்தால் தனது கள்ள உறவுக்கு இடையூறாக இருப்பார் என்று நினைத்து அவரை கொன்று விட ஏற்கனவே முடிவு செய்து இருக்கிறார். கணவருக்கு விஷம் ஊசி போட்டு விட முடிவு செய்திருந்திருக்கிறார். அதன்படி வெளியே சென்ற கள்ளக்காதலனை மருத்துவமனையின் கழிவறை அருகில் வரவைத்து இருவரும் சேர்ந்து தேஷ்முக்கிற்கு விஷ ஊசி செலுத்தி இருக்கிறார்கள்.

இதனால் தேஷ்முக் கோமா நிலைக்கு சென்று இருக்கிறார். 33 நாட்கள் கோமாவில் இருந்த தேஷ்முக், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் தனது தாய் சுகாசினி தான் என்பதை உணர்ந்த தேஷ்முக் மகன் பரிஷத் , போலீசாருக்கு தகவல் சொல்லி இருக்கிறார் .

தேஷ் முக் இறந்ததும் சுகாசினியும் அவரது கள்ளக்காதலன் அருண் காண்டேகரும் தலைமறைவாகி விட்டனர். தேஷ்முக்கிற்கு சுகாசினி இரண்டாவது மனைவி. சுகாசினியுடன் தனிக்குடித்தனம் நடத்துவதற்கு முன்பாக அவர் சுகாசினியுடன் தொடர்பில் இருந்த போது முதல் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

அப்பொழுது முதல் மனைவி தற்கொலைக்கு முயன்றதால் தற்கொலைக்கு தூண்டிய குற்றத்தில் தேஷ்முக் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.