இந்த பெஸ்ட்டி இருக்கட்டும், அப்போது அந்த பையன் என்ன ஆனான் : ஜுலியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

892

ஜுலியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதியது. பாலிவுட்டில் 11 சீசனுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியிருக்கிறது, தமிழ் மற்றும் தெலுங்கில் இரண்டு சீசன்கள் முடிந்துவிட்டது.

இந்த பிக்பாஸில் முதல் சீசன் மூலம் பலரின் கோபங்களுக்கு ஆளானவர் ஜுலி. அந்நிகழ்ச்சி பிறகு பல கஷ்டங்களை தாண்டி தொகுப்பாளினியாக வலம் வந்தார், படங்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த வருடம் மார்க் ஹம்ரன் என்பவருடன் புகைப்படம் போட்டு பெஸ்ட்டி என பதிவு செய்த அவர் எழில் இயக்கத்தில் இருவரும் படம் நடிக்கிறோம் என்றும் கூறியிருந்தார்.

இப்போது ஒரு புதிய நபருடன் அதே பெஸ்ட்டி என போட்டு புகைப்படங்கள் போட்டு வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ மார்க் என்ன ஆனார் என கொஞ்சம் மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.