இதில் உங்க ராசியும் இருக்கா?
ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணமுடையவர்கள்.
அந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த தளராத மனதுடன் இருப்பார்கள் என்று இங்கு பார்க்கலாம்.
மேஷம் : மேஷ ராசிக்காரர்கள் பதில்களை பெறுவதில் மிகவும் உறுதியானவர்களாக இருப்பார்கள், மற்ற எதையும் பற்றி இவர்கள் சிந்திக்கவே மாட்டார்கள். அந்த பதிலில் மட்டுமே அவர்களின் முழு கவனமும் இருக்கும். அவர்களின் பிடிவாதத்தால் அவர்கள் எளிதில் அதை விடமாட்டார்கள்.
அவர்களுக்கான பதில் கிடைத்தே ஆகா வேண்டும் அதன் பின்விளைவுகளை பற்றி அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். சாதாரணமாக தொடங்கும் இவர்களின் தேடல் இறுதியில் இவர்களின் இலட்சியமாக மாறிவிடும்.
கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு பிடிக்காத ஒன்று ஒரு கேள்விக்கு பதில் தெரியாமல் இருப்பது. அது சிறிதாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி அவர்களுக்கு அதன் மீது ஆர்வம் வந்துவிட்டால் அதற்கான பதிலை தெரிந்து கொள்ளும்வரை அதைப்பற்றியே சிந்தித்து கொண்டிருப்பார்கள்.
வீட்டிற்கு சென்று குழப்பமான மனநிலையில் இருப்பதை விட நேரம் செலவழித்து அந்த மர்மத்தை தெரிந்து கொண்டு நிம்மதியாக இருப்பது நல்லது என்று நினைப்பவர்கள் இவர்கள்.
சிம்மம் : இவர்களுக்கு சிற்றலை விளைவு சுத்தமாக பிடிக்காது.சிற்றலை விளைவு என்பது எந்தவொரு பெரிய விஷயமும் ஒரு சிறிய விஷயத்தில் இருந்துதான் தொடங்கும் என்பதாகும்.
ஒரு விஷயத்தை கண்டு பிடிக்க வேண்டுமென்றாலோ அல்லது மாற்றம் செய்ய வேண்டுமென்றாலோ அதனை முடிக்கும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள். தைரியமான இவர்கள் செயலில் ஈடுபட்டு தீர்வு ஏற்பட காரணமாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்கள் பார்த்து கொள்வார்கள் என்றோ அல்லது சோம்பேறித்தனத்தாலோ ஒருபோதும் தொடங்கிய செயலை விடமாட்டார்கள்.
மிதுனம் : யாராவது குழப்பமாக இருந்தால் அதனை தீர்த்து வைக்க மிதுன ராசிக்காரர்கள் அங்கு நிச்சயமாய் இருப்பார்கள். சரியான கேள்வியை கேட்டு, என்ன செய்ய வேண்டுமென்று நன்கு தெரிந்து அதனை எப்படி முடிக்க வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள்.
ஒருவரின் பொய்கள் மற்றவர்களை காயப்படுத்துவதை இவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வரை இவர்கள் விடமாட்டார்கள்.
ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்கள் ஒருபோதும் மற்றவர்களை பொய் சொல்ல அனுமதிக்க மாட்டார்கள். அதனை பொய் என்று நிரூபிக்க இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
உண்மையை கண்டுபிடிக்க எவ்வளவு காலம் தேவைப்பட்டாலும் பரவாயில்லை அதற்காக காத்திருப்பார்கள். ஒரு செயலில் ஈடுபட்டு விட்டால் இவர்கள் மிகவும் உறுதியானவராக மாறிவிடுவார்கள். முடிவை கண்டுபிடிக்க இவர்கள் பிடிவாதமாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வார்கள்.