இன்ஸ்டாகிராம் காதலனுக்கு 60 சவரன் நகைகளை திருடி கொடுத்த சிறுமி : போலீஸாரை மிரளவைத்த சிறுமி வாக்குமூலம்!!

1372

மதுரை…..

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலணி பகுதியைச் சேர்ந்த சுந்தரம்- மீனாட்சி தம்பதியினரின் 16 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே புரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவருடன் பழகி வந்துள்ளார்‌.

இந்த நிலையில் இருவரும் நேரில் சந்தித்து காதல் ஜோடிகள் போல் சுற்றி வந்த நிலையில் இதனை பயன்படுத்தி சதீஷ்குமார் 16 வயது சிறுமியிடமிருந்து தங்க நகையை வாங்கி விற்று உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து மகளிடம் விசாரணை மேற்கொண்டதில் சதீஷ்குமார் என்பவரிடம் நகையை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மாயமான நகைகள் சுமார் 18 லட்சம் மதிப்பிலான 60 சவரன் நகைகள். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் என்பவர் எனது மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 18 லட்சம் மதிப்பிலான 60 சவரன் நகை மிரட்டி வாங்கியுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.