இரவில் தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

1188

தயிர்…

தயிரை மழைக்காலத்தில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு என்று கூறுவார்கள். அதுபோல தயிரை இரவில் சாப்பிடக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் இது அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.

இருப்பினும் தயிரை சாப்பிடுவதில் ஒரு சில விதிமுறைகள் உள்ளன. சரி வாங்க தயிரை இரவு சாப்பிட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்..

  • கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தயிர் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவோம். மேலும் தயிரில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே தயிரை சாப்பிடுவதால் எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு செரிமான மண்டலமும் நன்கு செயல்படும்.

  • சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் தயிரை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. மேலும் இதனை ஆயுர்வேத மருத்துவமும் கூறுகிறது. தயிரை இரவில் தனியாக அப்படியே சாப்பிடுவதால் சளியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகவும். எனவே இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

  • உங்களால் தயிர் சேர்க்காமல் இருக்க முடியாதெனில் மோர் குடிக்கலாம். தயிரை பகல் நேரத்தில் சாப்பிடும் போது அத்துடன் சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுவே இரவில் சாப்பிடும் போது சர்க்கரை அல்லது மிளகுத் தூளை சேர்த்தும் சாப்பிடலாம். இதனால் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு வயிறும் குளிர்ச்சியடையும்.

  • வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து பச்சடி போன்று செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த வகையிலும் தீங்கு ஏற்படுத்தாது.