இரவு நேரத்தில் லிப்டில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!!

635

கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகழக மாணவிக்கு விடுதி லிப்ட்டில் பாலியல் தொல்லை கொடுத்த லிப்ட் ஊழியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனது சக மாணவியைச் சந்திக்க லிப்ட் மூலம் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது லிப்ட் இயக்குனராக பணிபுரிந்து வரும் அர்ஜூன் என்பவர் மாணவியை லிப்டிலேயே பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட சக மாணவர்கள் லிப்டை தரையிறக்கி மாணவியை காப்பாற்றியுள்ளனர்.

இதைதொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பல்கலைகழக நிர்வாகத்திடமும் காவல் நிலையத்திலும் சக மாணவர்கள் புகார் அளித்தனர். மேலும், மாணவர்கள் சாலை மறியல் மற்றும் பல்கலைகழகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து லிப்ட் ஆப்ரேட்டர் அர்ஜுனை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.