இலங்கையர்களை நெகிழ வைத்த உயிருக்கு போராடிய மகள்! அழகிய சிறுமிக்கு நடந்தது என்ன?

1096

இலங்கையில் பேஸ்புக் நண்பர்களின் உதவியின் மூலம் சிறுமி ஒருவர் உயிர் தப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நான்கு வயதான டெனாரா மிஹேலி என்ற சிறுமிக்கு சத்திர சிகிச்சை மூலம் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சைக்கு தேவையான பணத்தை வழங்க உதவுமாறு சிறுமியின் தந்தை டயான் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.இதனை பார்த்த பேஸ்புக் நண்பர்கள் அவருக்கு தேவையான நிதியினை வழங்கி, சிறுமியின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

கடந்த நாட்களில் பேஸ்புக் பக்கங்களில் அழகிய சிறுமியின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.இதய நோயினால் பாதிக்கப்பட்ட மிஹேலிக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள எட்டு இலட்சம் ரூபா பணம் தேவை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தொழிற்சாலையில் பணியாற்றும் டயானினால் அந்தத் தொகையை பெற்றுக்கொள்ளவதில் சிக்கல் நிலை ஏற்பட்டது.இதனையடுத்து பேஸ்புக் நண்பர்கள் மூலம் பண உதவியை பெற்று தனது மகளை காப்பாற்றியுள்ளார்.உதவி புரிந்த அனைவருக்கும் டயான் நன்றி தெரிவித்துள்ளார்.