இந்தியாவில் இளம்பெண்ணொருவரை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த கார் ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பெங்களூருவில் ஜேபி நகரைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணொருவர், கடந்த 1ஆம் திகதி விமான நிலையம் செல்ல ஓலா காரை வரவழைத்தார்.
இரவு 2 மணியளவில் கார் குறித்த பெண் இருக்கும் இடத்திற்கு வந்தது. வினோத் எனும் ஓட்டுநர் காரை ஓட்டி வர குறித்த பெண் அதில் பயணித்தார். அவர் தனியாக இருப்பதை கவனித்த ஓட்டுநர் காரை வேறு திசைக்கு திருப்பியுள்ளார்.
அதுகுறித்து அப்பெண் கேள்வி எழுப்ப, விமான நிலையம் செல்ல இதுதான் குறுக்கு வழி என கூறியுள்ளார் வினோத்.ஆனால், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்திய ஓட்டுநர் வினோத், காரின் கதவுகளை Lock செய்துவிட்டு குறித்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
அவரது கைப்பேசியை பறித்த வினோத், தான் சொல்வதை கேட்கவில்லை என்றால் நண்பர்களை அழைத்து கூட்டுப்பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவேன் என மிரட்டியுள்ளார்.
அதன் பின்னர், கத்தியை காட்டி குறித்த பெண்ணின் ஆடைகளை களையும்படி கூறியுள்ளார்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தவுடன், அவரது கழுத்தை பிடித்து கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், குறித்த பெண் ஆடைகளை களைந்து, அதனை புகைப்படங்களை எடுத்துள்ளார்.
இச்சம்பவத்தை வெளியில் கூறியினால் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய வினோத், பின்னர் விமான நிலையம் அருகில் அப்பெண்ணை விட்டுவிட்டு சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, விமான நிலையம் சென்ற குறித்த பெண், உடனடியாக தனது மடிக்கணினியை திறந்து காவல்துறை தலைவருக்கு இதுதொடர்பான புகாரை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசார் வினோத்தை கைது செய்து, அவரிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர்.