இளவரசர் வில்லியமுக்கோ ஹரிக்கோ கிடைக்கவில்லை: ஆனால் மெர்க்கலுக்கு மட்டும் கிடைத்த கௌரவம்!!

722

இளவரசர் வில்லியமுக்கோ, இரண்டாம் டயானா என்றழைக்கப்படும் கேட் மிடில்டனுக்கோ, ஏன் மெர்க்கலின் கணவர் ஹரிக்கோ கூட கிடைக்காத ஒரு பெரிய கௌரவம் ராஜ குடும்பத்தில் சமீபத்தில் இணைந்த மேகன் மெர்க்கலுக்கு கிடைத்திருக்கிறது.

இதுவரை ராஜ குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் மட்டுமே பயணம் செய்துள்ள ராஜாங்க ரயிலில் தன்னுடன் இணைந்து பயணிக்க மகாராணி மேகன் மெர்க்கலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராணி, இளவரசர் பிலிப், இளவரசர் சார்லஸ் மற்றும் டச்சஸ் ஆஃப் கார்ன்வால் ஆகியோர் மட்டுமே அந்த ரயிலில் பயணம் செய்ய உரிமையுள்ளவர்கள் ஆவார்கள்.

அடுத்த வியாழக்கிழமை மகாராணியும் மேகனும் Cheshireஇல் மூன்று முக்கிய அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்கள்.மகாராணியும் மேகனும் பயணம் செய்ய இருக்கும் அந்த ரயிலில், கடந்த ஆண்டு ராணி பயணம் செய்ததற்கான செலவு 900,000 பவுண்டுகள் ஆகும்.

இது மிகப்பெரிய தொகை என்றாலும் இரவு நேர நீண்ட தூரப் பயணங்களில் இந்த ரயிலில் பயணம் செய்வதே வசதியாக உள்ளதாக மகாராணி கருதுகிறார். இதுபோக இன்னொரு கௌரவத்தையும் மகாராணி புதுமணத் தம்பதியினருக்கு அளிக்க இருக்கிறார்.

லண்டனுக்கு வெளியே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்னும் ராஜ மரபை உடைத்திருந்தாலும்கூட, இளவரசர் ஹரிக்கும் மேகனுக்கும் Trooping the Colour என்னும் கௌரவத்தை அளிப்பதோடு, பக்கிங்காம் மாளிகையின் பால்கனியில் தோன்றும் கௌரவத்தையும் மகாராணி அளிக்க உள்ளார்.

ராஜ குடும்பத்தைச் சேராத, கலப்பினப் பெண்ணாக இருந்தாலும் மேகனுக்கு மகாராணி அளிக்கும் கௌரவம் பிரித்தானியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.