இளவரசி டயானாவின் நகைகளை அதிகமாக பிரித்தானிய அரச குடும்பத்து மருமகள்கள் அணிவது ஏன்?

576

பிரித்தானிய அரச குடும்பத்து மருமகள்களான கேட் மிடில்டன் மற்றும் மேகன் மெர்க்கல் ஆகிய இருவரும் தற்போது டயானாவின் நகைகளை அதிகம் அணிய ஆரம்பித்துள்ளனர்.

வில்லியம் – கேட் திருமணத்தின்போது தனது தாயின் மோதிரத்தையே தனது மனைவிக்கு அணிவித்தார் வில்லியம். அதுபோல ஹரி – மெர்க்கல் நிச்சயதார்த்தத்தின்போதும் தாய் டயானாவின் மோதிரத்தையே ஹரி, மெர்க்கலுக்கு அணிவித்தார்.

சமீபகாலமாக இளவரசி டயானாவின் நகைகளை அதிகமாக அரச குடும்பத்து மருமகள்கள் அணிய ஆரம்பித்துவிட்டனர். காரணம், டயானா அரச குடுபத்தை விட்டு செல்கையில் தான் அணிந்த நகைகள் அனைத்தையும் தனது இரு மகன்களின் மனைவியருக்காக விட்டு சென்றுள்ளார்.

நகைகள் அனைத்தையும் கேட் மற்றும் மெர்க்கல் பிரித்து எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் இவர்கள் இருவருமே டயானாவின் நகைகளை அணிவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.