உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை பூஜா ஹெக்டே!!

152

பூஜா ஹெக்டே..

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் பெரிதளவில் ஹிட்டாகவில்லை.

இதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்தி வந்த நடிகை பூஜாவிற்கு தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்னணி நடிகையாக உயர்ந்த பூஜா ஹெக்டே, தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

மேலும் தற்போது சூர்யாவுடன் இணைந்து சூர்யா 44 படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவையும் தாண்டி நடிகை பூஜா ஹெக்டேவிற்கு பாலிவுட் திரையுலகிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், பூஜா ஹெக்டே உடல் எடை கூடிவிட்டாரா என கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆளே மாறியுள்ளார்.