
இந்தியாவில் 11 பேர் கொண்ட கும்பல் சிறுமிகளுக்கு உதவி செய்ய சென்று, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹர்கி ஹர்ரா எனும் பகுதிக்கு, 2 சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது வழியில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சிறுமிகளில் ஒருவர் உதவிக்கு வருமாறு தனது நண்பரை கைப்பேசியில் அழைத்துள்ளார். ஆனால் குறித்த நபரோ 11 பேரை உதவிக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
சிறுமிகள் இருக்கும் இடத்திற்கு சென்ற அவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிறுமிகளை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர், சிறுமிகளிடமிருந்து கைப்பேசிகளையும் பறித்துச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஹர்கி ஹர்ரா பகுதியில் பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் குறித்த 11 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.