பிரனய்

தெலுங்கானாவை சேர்ந்த பிரனய் ஆணவக்கொலை செய்யப்பட்டதற்கு பிரபல நடிகர் ராம்சரண் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாழ்ந்த சாதி நபரான பிரனய் என்பவரை அம்ருதா என்ற பெண் காதல் திருமணம் செய்த நிலையில் கர்ப்பமானார். இத்திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அம்ருதாவின் தந்தை மாருதி, சில தினங்களுக்கு முன்னர் கூலிப்படையை ஏவி பிரனயை கொலை செய்தார்.

இச்சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பிரபல தெலுங்கு சூப்பர்ஸ்டார் ராம்சரண் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், ஆணவக்கொலை என்பதை கேட்டாலே அருவருப்பாக உள்ளது. ஒருவரின் உயிரை எடுப்பதில் என்ன கெளரவம் இருக்க போகிறது? ஒரு சமுதாயமாக நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம். அம்ருதாவுக்கும், பிரனய் குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.