உயிரோடு எரித்து கொல்லப்பட்ட அழகிய இளம்பெண் : கணவர் குடும்பத்தார் வெறிச்செயல்!!

1008

இந்தியாவில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பெண் கணவர் குடும்பத்தாரால் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தெபஷிஸ். இவர் மனைவி சந்திரகாந்தி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணமானது முதலேயே சந்திரகாந்தியை அவர் கணவரும், மாமியாரான மனோரமாவும், மாமனாரான ரவீந்திராவும் 50,000 பணம் மற்றும் பைக்கை வரதட்சணையாக கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர்.

இது குறித்து தனது தந்தையிடம் சந்திரகாந்தி கூறிய போதும் ஏழ்மை நிலை காரணமாக அவரால் அதை தர முடியவில்லை.

இந்நிலையில் நேற்று மீண்டும் சந்திகாந்திக்கு வரதட்சணை கொடுமை நடந்துள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த அவரின் கணவர் மற்றும் மாமியார், மாமனார் சந்திரகாந்தி மீது மண்ணெணெய் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளனர்.

வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சந்திரகாந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி வருகிறார்கள்.