உலக பணக்காரர்கள் பட்டியலில் 13 ஆம் இடத்துக்குப் போனார் முகேஷ் அம்பானி!!

339

முகேஷ் அம்பானி……….

ரு கட்டத்தில் உலகின் 4 ஆவது பெரிய பணக்காரர் என்ற நிலை வரை சென்ற முகேஷ் அம்பானி இப்போது 13 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

புளூம்பெர்கின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலின் படி, ரிலையன்ஸ் அதிபரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.62 லட்சம் கோடியில் இருந்து 5.36 லட்சம் கோடியாக குறைந்து விட்டது.

கடந்த ஆகஸ்டில் உலகின் நான்காவது பெரும் பணக்காரராக இருந்த அவரின் நிகர சொத்து மதிப்பு, ரிலையன்ஸ் பங்கு விலை வீழ்ச்சியின் காரணமாக குறைந்துள்ளது.

பியூச்சர் குழுமத்தின் சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத்தை ரிலையன்ஸ் வாங்கும் என்ற அறிவிப்பு மற்றும் அது தொடர்பான குழப்பம் காரணமாக, ரிலையன்ஸ் பங்குகள் 18.3 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்தன.