உள்ளாடையிலிருக்கும் உங்கள் மகளின் புகைப்படம் வேண்டும் : தாயை அதிரவைத்த செய்தி!!

1043

டொராண்டோவில் வசிக்கும் ஒரு தாய், இறுக்கமான உடை மற்றும் உள்ளாடையிலிருக்கும் இளம்பெண்களின் படங்களைக் கேட்பதற்காக தனது முகநூல் பக்கத்தை இன்னொருவர் பயன்படுத்துவதை அறிந்து அதிர்ச்சியுற்று பொலிசாருக்கு புகாரளித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளாக முகநூல் குழு ஒன்றின் மூலமாக சிறுவர் சிறுமியரின் உடைகளை விற்று வந்தார் Kerry-Ann.

இந்த வாரத்தில் திடீரென அவருக்கு திடீரென வித்தியாசமான செய்திகள் வர ஆரம்பித்தன. அவருக்கு ஒரு ஸ்கிரீன் ஷாட் வந்தது.

அதில், உங்கள் மகளின் படங்களையும், அவள் இறுக்கமான உடையிலும் உள்ளாடையிலும் இருக்கும் படங்களையும் அனுப்புங்கள் என்று ஒருவர் இன்னொருவரிடம் கேட்கும் செய்தி இருந்ததைக் கண்டு Kerry-Ann அதிர்ந்தார்.

இதை கண்டிப்பாக புகார் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார் அவர். Kerry-Ann பேஸ்புக் குளோனிங் என்னும் சதிக்கு ஆளாகியிருக்கிறார்.

அதாவது ஏற்கனவே ஒருவர் பயன்படுத்தும் பேஸ்புக் பக்கத்தைப் போலவே அவர் பெயரிலேயே இன்னொரு போலிப்பக்கத்தை உருவாக்கி, பார்ப்பவர்கள் அது அவருடைய பக்கம் என்றே நினைக்கச் செய்துவிடுவார்கள்.

அதன் மூலம் அவர்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள், பார்ப்பவர்களுக்கு Kerry-Ann இதைச் செய்வதாகவே தோன்றக்கூடும்.

Kerry-Ann தனக்கு வந்த செய்தியிலிருந்து யாரோ ஒருவர், 12 முதல் 18 வயதுடைய மகள்களை உடைய குடும்பங்களை குறிவைக்கிறார் என்பதை அறிந்து கொண்டார்.

தனது முகநூல் பக்கத்தைப் பயன்படுத்தி யாரோ குழந்தைகளையும் அவர்களது குடும்பங்களையும் ஏமாற்றி அந்த புகைப்படங்களை பயன்படுத்தி ஏதோ செய்யப்போகிறார்கள் என்பது தெரியவந்ததும் நான் அச்சமடைந்தேன் என்கிறார் Kerry-Ann.

ஒரு தாய் என்னும் வகையில் இது நடப்பதை நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது, ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததாக தெரிவிக்கும் Kerry-Ann, டொராண்டோ பொலிசாரிடம் இது குறித்து புகாரளித்தார். பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.