எகிப்திய அழகி கிளியோபாட்ராவின் ரகசிய அழகு குறிப்புகள்

4504

வரலாற்றில் மறக்க முடியாத “அழகின் ராணி” என்றே பலராலும் அறியப்படுபவள் தான் எகித்தின் பேரழகி கிளியோபாட்ரா.கிளியோபாட்ரா பல கோடி உயிர்களைத் தன் பக்கம் கவர்ந்து இழுத்த ஒரு மகா தேவதையாக திகழ்ந்தார்.

பேரழகி கிளியோபாட்ரா, கருப்பழகி என்றும் அறியப்படுகிறார்.கிளியோபாட்ரா என்றும் இளமையாக தோற்றம் அளிக்க இந்த அழகு குறிப்பையே தினமும் செய்தாராம்.

முகத்திற்கு:2 ஸ்பூன் தேன் மெழுகுவை நன்கு சூடாக்கி அதனுடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யை சேர்த்து பிறகு அதனுடன் 2 ஸ்பூன் கற்றாழை சாறு மற்றும் 4 துளி ரோஜாவில் தயாரித்த எண்ணெய்யை ஊற்றி கலக்க இந்த இந்த கிரீமையே கிளியோபாட்ரா தினமும் பயன்படுத்தி வந்தாராம்.

ஃபேசியல் மாஸ்க்:சிறிது வெள்ளை களிமண்ணை 2 டீஸ்பூன் பால், 1 ஸ்பூன் தேன், மற்றும் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து கலந்து பிறகு 10 நிமிடம் ஊற வைத்து முகத்தில் ஃபேசியல் மாஸ்க் போல 20 நிமிடம் போட்டு, பின் வெந்நீரில் முகத்தை கழுவி விடுவாராம். இதுவே அவரின் பளபளப்பான மென்மையான சருமத்திற்கு காரணமாம்.

முகத்தில் நோய்க் கிருமிகளை அழிக்க:1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யுடன் 1 முட்டையின் மஞ்சள் கரு, 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். பின் இந்த மாஸ்க்கை 15 நிமிடம் முகத்தில் பூசி மசாஜ் செய்வாராம்.இது அவரின் முகத்தில் எந்த அழுக்கும் சேராமல் சுத்தமாக வைக்குமாம். மேலும் முகத்திற்கு எந்தவித நோய் தொற்றையும் ஏற்படுத்தாதாம்.

கிளியோபாட்ராவின் இயற்கை ஷாம்பூ:முடியின் அழகிற்கும் பெரிதும் கவனம் செலுத்தினாராம். இதற்காகவே அவர்கள் இயற்கை முறையிலான ஷாம்பூவையே எப்போதும் உபயோகிப்பாராம்.

முட்டையின் வெள்ளை கருவை எடுத்து முடி முழுவதும் தடவி மசாஜ் செய்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது முடியை மிக போஷாக்காக வைக்க உதவுமாம்.மேலும் மருதாணி இலைகளை செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து தலையில் தடவுவாராம்.

தங்க ஃபேஸ் மாஸ்க்:மிகவும் விலை உயர்ந்த ஃபேஸ் மாஸ்க் என்றால் அது கிளியோபாட்ரா பயன்படுத்திய தங்க ஃபேஸ் மாஸ்க்தான்.முழுக்க முழுக்க தங்கத்தை உருக்கி அதனை முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போல உபயோகிப்பாராம்.இதுவே அவரின் முக அழகுக்கு ஒரு முக்கிய பங்கு என ஆரய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முடி உடைதலை தடுக்க:3 ஸ்பூன் தேனை 1 டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்த்துக் கொள்ளுவராம். சில சமயங்களில் ஆலிவ் எண்ணெய்யை கூட அவர் தலைக்கு பயன்படுத்துவாராம்.

என்றும் இளமையாக இருக்க:குளியல் பாத்திரத்தில் பால் மற்றும் தேனை ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து அதன்பின் அதில் குளியல் செய்வாராம். கடைசியாக உடல் மென்மையக இருக்க ரோஜா இதழ்களை அதில் இட்டு குளியலை முடிப்பாராம்.

தோல் பளபளக்க:வறண்ட தோலை மினுமினுப்பாக்க கிளியோபாட்ரா கற்றாழை சாற்றை தேனுடன் கலந்து உடல் முழுக்க தடவினாராம்.இத்தனை அழகையும் அவர் பெற இந்த அழகு குறிப்புகளே முக்கிய பங்காக இருந்தது.