இளைஞர் செய்த பகீர் செயல்

தமிழகத்தில் முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்ததாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளதை அடுத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் (28). இவரது மனைவி அமரஜோதி (26). விருதுநகரை சேர்ந்த அமரஜோதி பொலிசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அதில், எனது கணவர் முருகனுக்கு இந்துமதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். அதனை மறைத்து என்னை 2-வது திருமணம் செய்துள்ளார். தனக்கு திருமணம் ஆகவில்லை என பொய் சொல்லி என்னை மணந்தார்.

இதோடு எனது நகைகளை பறித்து விற்பனை செய்து விட்டதோடு அதனை கேட்டால் அடித்துக் கொடுமைப்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையில் செல்வகுமாரி தன்னை தாக்கியதாக அரசு ஆஸ்பத்திரியில் முருகன் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.