என்னது.. இந்த நடிகை ஓரினைச் சேர்க்கையாளரா?

1201

ரெஜினா காசென்ரா

தமிழில் 2013 இல் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ரெஜினா காசென்ரா. ரசிகர்களிடம் அந்த படத்திற்கு முன்பே 2005 இல் வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமகிவிட்டார்.

தற்போது இந்தி படத்தின் ஒரு ரி மேக்கில் ஓரின சேர்க்கையாளராக நடிக்க உள்ளார். அனில் கபூர், சோனம் கபூர், ஜூஹி சாவ்லா, ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஏக் லடுகி கோ தேகா தோ ஐசா லகா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இப்படம் குறித்து ரகசியம் காத்துவந்த சோனம் இது ஒரு வித்தியாசமான காதல் கதை என்று மட்டுமே சொல்லி வந்தார். அந்த வித்தியாசம் என்பது லெஸ்பியன் காதல் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதே போல் சோனம் கபூரின் காதலியாக நடித்தவரும் நேற்றுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவருடைய பெயரும் லீக்காகியுள்ளது. அவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா முதல் கடந்த வாரம் ரிலீஸான சிலுக்குவார்பட்டி சிங்கம் வரை சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்திருக்கும் ரெஜினா.

ஆனால் படம் ரிலீஸாகும் வரை யாருக்கும் பேட்டி தரக்கூடாது என்று தயாரிப்பாளர் தரப்பில் கெடுபிடி இருப்பதால் ரெஜினா பத்திரிகையாளர்களிடம் பேச மறுத்துள்ளாராம்.