என் மகளை ஆசை வார்த்தைகளை கூறி சீரழிச்சுட்டாங்களே : கதறிய தாய்.. இளைஞனின் அதிர்ச்சி முடிவு!!

814

அதிர்ச்சி முடிவு

கடலூர் மாவட்டத்தில் 19 வயது இளைஞன் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதில் அந்த சிறுமி ஆட்டோவில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். உஷாராணி என்ற பெண்மணி கணவர் இல்லாததால் தனது இரு மகள்களையும் ஊரில் தங்கவைத்து விட்டு திருப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார்.

16 வயதுடைய இவரது மூத்தமகள் சிதம்பரத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியிலுள்ள விளத்தூர் கிராமத்தை சேர்ந்த வேறு சமூகத்தை சார்ந்த ராகுல்(19) என்ற இளைஞர் அந்த மாணவியிடம் தொலைபேசி மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு கடந்த ஒன்னரை வருடமாக காதலிக்கிறேன், உன்னை தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி அவரை கர்ப்பமாக்கியுள்ளான்.

மேலும், இதனை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம், நான் உன்னைதான் கல்யாணம் செய்துகொள்வேன் என தொடர்ந்து கூறி தனிமையில் இருந்துள்ளார்.

கடந்த 30ந்தேதி மாணவிக்கு வயிற்று வலி அதிகமாகியுள்ளதால் அவரது உறவு வழி பாட்டி ஒருவரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். அவர் பார்த்துவிட்டு உடனே ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆட்டோவில் செல்லும் போதே மாணவிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது.

பிள்ளைகள் நல்லா படிக்க வேண்டும் என்று தானே பல மைல் தான்டி பட்டினி கிடந்து கூலிவேலை செய்து வந்தேன். என் பிள்ளையை ஆசை வார்த்தை கூறி சீரழிச்சிட்டாங்களே என்று அழுது புலம்பியது அங்கிருந்தவர்களின் நெஞ்சை வருடியது.

காவல்துறையினர் சம்பந்தபட்ட இளைஞரை அழைத்து விசாரணை செய்த போது இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று பெற்றோர் பேச்சை கேட்டுகொண்டு மறுத்துள்ளார்.

பின்னர் விசாரணையில் இவன் மீது தவறு உள்ளதை அறிந்த காவல்துறை அவளுடன் குடும்பம் நடத்துகின்றாயா என்றதுக்கு, நான் ஜெயிலுக்கே போகிறேன் அவ தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் யாரும் ஏத்துக்கமாட்டாங்க என்று கூறி போக்ஸோ சட்டத்தில் சிறைக்கு சென்றுள்ளான்.