ஏலத்துக்கு வரும் இளவரசி டயானா எழுதிய கடிதம்: என்ன எழுதியிருந்தார் தெரியுமா?

790

பிரித்தானிய இளவரசி டயானா கைப்பட எழுதிய கடிதம் ஏலத்துக்கு வரவுள்ளது.மறைந்த டயானா தனது 30-வது பிறந்தநாளை ஜூலை 1-ஆம் திகதி 1990-ஆம் ஆண்டு கொண்டாடிய நிலையில் இக்கடிதத்தை ஜூன் 2-ஆம் திகதி எழுதியுள்ளார்.

ஆடை வடிவமைப்பாளரான ப்ரூஸ் ஓல்ட் பீல்ட் மற்றும் அவரின் வியாபார பங்குதாரரான அனிதா ரிச்சட்சனுக்கு அக்கடிதத்தை டயானா எழுதியுள்ளார்.

கெங்சிங்டன் அரண்மணை காகித அட்டையில் எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில், அன்புள்ள ப்ரூஸ் மற்றும் அனிதாவுக்கு, எனக்கு தரப்பட்ட ஜெர்சி அற்புதமாக இருந்தது.

என் 30-வது வயதில் நுழையும் சமயத்தில் கிடைத்த இந்த ஜெர்சி என் மனதை தொட்டது, இது போலவே எனக்கு ஒரு மெடலும் வேண்டும்.

எப்படியிருந்தாலும், இந்த ஜெர்சி அன்புடன் என்னிடம் வந்துள்ளது, இந்த ஞாயிற்றுகிழமை மிக மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் உதவியதற்கு நன்றி என எழுதியுள்ளார்.

இந்த கடிதமானது பிரபல RR Auctions ஏல நிறுவனம் மூலம் ஏலத்தில் விடப்படவுள்ளது.

இது குறித்து கூறிய ஏல நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பாபி லிவிங்ஸ்டன், இளவரசி டயானாவின் கையெழுத்து அழகானது மற்றும் அந்த கடிதத்தில் அவரின் அன்பு தெரிகிறது.

அதே நேரத்தில் கடிதத்தில் டயானா கையெழுத்து போட்டுள்ளார், ராஜ வம்ச நெறிமுறைகள் படி அவர் கையெழுத்து போடக்கூடாது, ஆனால் அதை டயானா மீறியுள்ளதாக பாபி கூறியுள்ளார்.