
தமிழகத்தில் 7 திருமணம் செய்து கொண்ட 65 வயது கோடீஸ்வரர், தங்களது மகளை 8வது திருமணம் செய்ய முயற்சிப்பதாக பெற்றோர் க ண்ணீர் மல்க கூறியுள்ளது ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனியை சேர்ந்தவர் பஷீர். இவருடைய மனைவி பாத்திமா. இவர்களது 23 வயது மகள் நெல்லையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடையில் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் பஷீர் மற்றும் பாத்திமா ஆகியோர் சேர்ந்து நெல்லை பொலிசில் ஒரு புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுடைய மகள் நெல்லையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். அப்போது ஒரு கோடீஸ்வர தொழில் அதிபர், மகளை திருமணம் செய்து கொள்வதாகவும், ஹொட்டல், சூப்பர் மார்க்கெட்டுகளை தருகிறேன் என்றும் ஆசை வார்த்தை கூறியும் தனி வீட்டில் தங்க வைத்துள்ளார்.
அவருக்கு 65 வயதுக்கு மேல் ஆகிறது, ஏற்கனவே 7 பெண்களை திருமணம் செய்துள்ளார், தற்போது எங்களுடைய மகளை 8வதாக திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கிறார். இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
அவரிடம் இருந்து எங்களுடைய மகளை மீட்க சென்றபோது கொ லை செய்து விடுவதாக மி ரட்டி வி ரட்டி அ டித்தார். எனவே, எங்களுடைய மகளை உடனடியாக மீட்டுத்தர வேண்டும் என கூறி கதறிய அழுதார்கள். இது தொடர்பில் பொலிசார் தங்கள் வி சாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.