முக்கிய தகவல்

இந்தியாவின் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்த வீடு உள்ள பகுதியில் ஆவிகள் உள்ளதாக வதந்தி பரப்ப வேண்டாம் என அருகில் வசிப்பவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புராரி பகுதியில் உள்ள வீட்டில் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரே குடும்பத்தை 11 பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர்.
பொலிசார் நடந்திய விசாரணையில் மூடநம்பிக்கை காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் வசித்த வீடு விசாரணைக்கு பிறகு தினேஷ் என்ற குடும்ப உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் அந்த பகுதியில் ஆவியாக வலம்வருவதாக செய்திகள் தீயாக பரவின.

இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள நிலங்கள் மற்றும் வீடுகளின் விலைகள் சரிந்தன. இதனிடையில், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், இந்த பகுதிகளில் ஆவிகள் நடமாட்டம் உள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற வதந்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள் என கேட்டு கொள்கிறோம் என கூறியுள்ளனர்.