கேரளா……
கேரளாவில் நால்வர் அடங்கிய குடும்பம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவில்வமலாவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (47). ஹொட்டலில் வேலை செய்து வந்தார். இவர் மனைவி சாந்தினி (43) தம்பதிக்கு கார்த்திக் (14), ராகுல் (7) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் அதிகளவில் கடன் வாங்கியிருந்ததால் அதன் காரணமாக பிரச்சனைகளை சந்தித்து வந்தார். இதையடுத்து நேற்று காலை 8.30 மணிக்கு மொத்த குடும்பமும் தங்கள் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீவைத்து கொண்டனர்.
முதலில் அக்கம்பக்கத்தினர் ராதாகிருஷ்ணன் வீட்டில் சிலிண்டர் வெடித்ததாக நினைத்தனர், பின்னர் தான் தீக்குளித்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு சாந்தினி மற்றும் ராகுல் உயிரிழந்த நிலையில் ராதாகிருஷ்ணன் மற்றும் கார்த்திக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்களும் இன்று உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.