உத்தரபிரதேசம்…..
உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதேபகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களையும் காதலித்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் பெண்ணின் தந்தைக்கு தெரியவந்ததால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென யாருக்கும் தெரியாமல் மூவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இரு சகோதரர்களும் தங்களது காதலியை அவர்களது தாய் மாமன் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியானது. அங்கு சென்று பார்த்த போது மூவரும் அங்கு இல்லை.
காதலர்கள் மூன்று பேரும் எங்கு சென்றார்? என்ற விபரம் இல்லை. இதனால் காவல் துறையினர் மூன்று பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.