ஒரே ஒரு கண்ணசைவு மூலம் தென்னிந்திய திரையுலகத்துக்கே பரிச்சயம் ஆகிவிட்டார் பிரியா வாரியர்.இந்தப் பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய எக்ஸ்பிரஷன் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.
ட்ரெண்டிங் பிரியா வாரியர் ரியாக்ஷன்ஸ் சமூக வலைதளமெங்கும் செம வைரல் ஆனதைத் தொடர்ந்து இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனார் பிரியா பிரகாஷ் வாரியர்.
இந்தியர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும், யார் இந்த பிரியா என தேட ஆரம்பிக்க, கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் டாப் இடத்தைப் பெற்றுவிட்டார் பிரியா.
கூகுளில் தேடலில் சன்னி லியோனுக்கு எப்போதும் டாப் இடம் உண்டு. இப்போது பாலிவுட் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துவரும் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளி அதிகமாக சர்ச் ஆகி இருக்கிறார் பிரியா.
இப்படி பிரியாவரியரின் திடீர் பிரபலமடைந்ததற்கு காரணம் ஒற்றை கண்ணசைவு தான்.ஒற்றை கண்ணசைவால் பிரபலமானவர்கள் பட்டியலில் பிரியாவாரியர் மட்டுமில்லை இந்திய நடிகைகளும் உள்ளனர்.வாருங்கள் அவர்கள் யாரென்பதை பார்க்கலாம்.