ஒளிந்திருந்த போலீஸ் கணவன்…. கணவன் இல்லாத நேரத்தில் மனைவி செய்த செயலால் அதிர்ச்சி!!

1287

தெலுங்கானா….

தெலுங்கானா மாநிலம் ஒருங்கிணைந்த வாரங்கல் மாவட்டம் சிஐடி அலுவலகத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிபவர் பாலபத்ர ரவி, இவருக்கும் ஹனுமகுண்டா ராம் நகர் பெண் சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் ஒரே பிரிவில் சிஐயாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலபத்ர ரவியும் அந்தப் பெண் காவலரும் நெருங்கி பழகி வந்தனர். அதில் இருவருக்குமிடையே கள்ளக் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். நிலையில் மனைவியின் நடத்தையில் கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே அந்தப் பெண் போலீசின் கணவரும் வரு போலீஸ் என்பதால் தன் மனைவியை நோட்டமிட்டு வந்தார். இந்நிலையில் அந்த பெண் காவலர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பாலபத்ர ரவியை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருத்தார். அப்போது மறைந்திருந்த அவரது கணவர் அவர்களை கையும் களவுமாக பிடித்தார்.

அந்தப் பெண் காவலரின் கணவர் மகபூப்நகர் மாவட்டத்தில் சிஐடி ஆக பணியாற்றி வருபவர் ஆவார். இந்நிலையில் தனது மனைவியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பாலபத்ர ரவியை வாரங்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட சுபேதார் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைத்தார்.

மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தான் வீட்டில் இல்லாத நேரங்களில் தனது வீட்டிற்கு வந்தது மட்டுமின்றி, தன்னை கொலை செய்து விடுவதாக பாலபத்ர ரவி தன்னை மிரட்டி வருவதாகவும் அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இச்சம்பவம் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது, இதை சுபேதார் போலீசார் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் பெண் காவலருக்கும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்க்கும் இடையேயான ரகசிய உறவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.