
அபுதாபி கடற்கரையில் பொழுதை கழித்துபோது சிறிய நண்டு ஒன்று காதுக்குள் புகுந்ததால், வெளிநாட்டு சுற்றுலாப்பயணி பெரும் அ வஸ்தையடைந்துள்ளார்.
அபுதாபிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர், கடந்த நவம்பர் 18, 2019 அன்று உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் கடற்கரையில் குளித்து மகிழ்ந்துள்ளார்.
அப்போது ஏதோ ஒன்று அவருடைய காதுக்குள் நுழைந்ததை போல உணர்ந்துள்ளார். ஆனால் அது என்னவென்று கண்டுபிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.
அடுத்த சில மணி நேரங்களில் தாங்க முடியாத வ லி ஏற்பட்டதோடு, பகுதி முழுவதும் வீக்கமடைந்துள்ளது.

இதனால் பயந்துபோன அந்த நபர், வேகமாக மருத்துவமனைக்கு விரைந்து சோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருடைய காதுக்குள் சிறிய நண்டு ஒன்று நுழைந்திருப்பது தெரியவந்தது.
அது உள்ளே சென்று நன்கு பதுங்கியிருந்ததால், உடனடியாக அதனை கவனத்துடன் அகற்ற மருத்துவர் முடிவு செய்தார். சிறிதும் தாமதிக்காமல் அடுத்த சில நிமிடங்களில் எண்டோஸ்கோப் உதவியுடன், அந்த சிறிய நண்டு உ யிருடன் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில், கடற்கரை பகுதியில் ஏதேனும் உயிரினங்கள் உள்ளே புகுந்தால், அதனை வெளியேற்ற முயற்சிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்யுமாறு மருத்துவர் எ ச்சரிக்கை விடுத்துள்ளார்.
காரணம் என்னவென்றால், அதனை நீக்க எடுக்கும் முயற்சிகள் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தலாம் என அவர் கூறியுள்ளார்.