கணவனின் கொ டுமைகள் குறித்து வேறு நபரிடம் பகிர்ந்து கொண்ட மனைவி : ஆறுதலுக்காக அவர் செய்த செயல்!!

712

தமிழகத்தில்..

தமிழகத்தில் இரண்டாவது கணவரை ஆற்றில் தள்ளி கொ லை செய்துவிட்ட காதலனை பொலிசில் காட்டி கொடுத்த மனைவி தான் செய்த கு ற்றத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மனைவி செல்வி. இவருக்கு வெங்கடேசன் 2வது கணவர் ஆவார். செல்விக்கு முதல் கணவருடன் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் வெங்கடேசன் கு டி போ தைக்கு அடிமையானதால் தினசரி கு டித்து விட்டு செல்வியை அ டித்து து ன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் பெருமாள் என்பவருடன் செல்விக்கு தொடர்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரிடம் கணவனின் கொடுமையை செல்வி கூறினார்.

இதனை கேட்ட பெருமாள் கடந்த 18 ஆம் திகதி இரவு வெங்கடேஷூக்கு அளவுக்கதிகமாக ம து வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் வெங்கடேஷ் கு டிபோ தையில் இருந்த போது அவரை காவிரி ஆற்று பாலத்திற்கு அழைத்து சென்ற பெருமாள் அங்கிருந்து அவரை ஆற்றில் தள்ளி விட்டு கொ லை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெங்கடேஷை கொ லை செய்ததை யாரிடமும் சொல்லாமல் இருப்பதற்காக செல்வியை கட்டாயப்படுத்தி அவருடன் பலமுறை தகாத உறவில் பெருமாள் ஈடுபட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த செல்வி சமீபத்தில் பொலிசில் சரணடைந்து தனது கணவனை பெருமாள் மூலம் காவிரி ஆற்றில் தள்ளி கொ லை செய்ததாக ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் பெருமாளை கைது செய்துள்ளதோடு, ஆற்றில் வீசப்பட்ட வெங்கடேசனின் ச டலத்தையும் தேடி வருகின்றனர்.