கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு… ஆத்திரத்தில் மனைவி செய்த செயல் : விசாரணையில் அம்பலம்!!

860

ஆத்திரத்தில் மனைவி செய்த செயல்

தமிழகத்தில் கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தண்ணீர் பந்தல்பாளையத்தை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம்.

இவர் பூங்கொடி என்பவரை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இருவரும் ஒன்றாக விசைத்தறி தொழில் செய்து வந்துள்ளனர். அப்போது வேலை செய்யும் இடத்தில் கல்யாண சுந்தரத்திற்கும், அங்கிருக்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது பூங்கொடிக்கு தெரியவர இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 23-ஆம் திகதி இரவு இதைப் பற்றி பேசிய போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கலயாண சுந்தரம் இனிமேல் என்னுடன் ஒன்றாக வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதனால் கணவன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த, பூங்கொடி அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த போது கணவரின் கழுத்தை மனைவி கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளார்.
ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக கணவரே கழுத்தை அறுத்துக் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் நடத்திய விசாரணையின் போது பூங்கொடி முன்னுக்கு, பின்னான பதிலை கூறியுள்ளார். அதன் பின் நான் தான் கொலை செய்தேன் என ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.