கணவர் இறந்த அதிர்ச்சி தாங்காமல் இருந்த மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

422

நெல்லை…

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வைத்திலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். 72 வயதான இவர் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி ஆவார். அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருடைய மனைவி அழகு திருமலைமுத்து. இவருக்கு வயது 62. இவர்களுக்கு 40 வயதில் சுருளிராஜன் என்ற மகன் உள்ளார்.

இவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சவுந்தர்ராஜனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சவுந்தர்ராஜன் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர். கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி அழகு திருமலைமுத்துவுக்கு நள்ளிரவில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

சிறிதுநேரத்தில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கத்தில் மனைவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.