கணவர் கண்முன்னால் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்!!

877

தமிழ்நாட்டில் கணவர் முன்னால் மனைவி மினிபஸ்சின் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவர் மனைவி சுசீலா (42). ரெங்கராஜும், சுசீலாவும் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அந்த சாலையில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்காக ஜல்லிக்கற்கள் போடப்பட்டிருந்ததால் பைக்கை ரெங்கராஜ் மெதுவாக ஓட்டி சென்றார்.

அப்போது எதிரில் வந்த மினிபஸ் ஒன்று இவர்களின் பைக் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பஸ்சின் சக்கரம் சுசீலாவின் மீது ஏறி இறங்கியதில், ரெங்கராஜ் கண்முன்னாலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து மனைவி உடலை பார்த்து கதறி அழுத ரெங்கராஜ், அந்த ஓட்டுனர் தான் சுசீலா இறப்புக்கு காரணம் என கண்ணீருடன் புலம்பினார். இச்சம்பவத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் மினிபஸ்ஸை அடித்து உடைத்தனர்.

தகவலறிந்து ரெங்கராஜின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில் சுசீலாவின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது விபத்தை ஏற்படுத்திய மினிபஸ்சின் டிரைவரை கைது செய்யக்கோரியும், உயிரிழந்த சுசீலாவின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு தரக்கோரியும் கோஷம் எழுப்பினார்கள்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவர்களை சமாதானப்படுத்தியதோடு பஸ் டிரைவரை கைது செய்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்