கணவர் குடும்பத்தார் செய்த செயல் : தற்கொலை செய்யும் முன் கடிதத்தில் மனைவி எழுதியிருந்த முக்கியமான வார்த்தை!!

1023

தற்கொலை

தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண், கணவர் வீட்டாரின் கொடுமை காரணமாகவே இந்த முடிவை எடுத்திருக்கும் சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

சேலம் ஜங்ஷனை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் புவனேஸ்வரி (24). இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கவுதமன் என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் கவுதமன் எந்த ஒரு வேலையும் இல்லாமல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டிய புவனேஷ்வரி, அவருடன் 2 மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்து வந்தார். அதன் பின் அவரை பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கணவர் கவுதமன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக புவனேஷ்வரிக்கு தகவல் கிடைத்ததால், அவரின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார்.

அப்போது, புவனேஸ்வரியின் மாமியார் அவரைத் திட்டி அனுப்பியதால் மனமுடைந்த புவனேஸ்வரி நான்கு நாட்களுக்கு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். புவனேஸ்வரியின் தற்கொலைக்குக் காரணமான கணவர் கவுதமன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புவனேஸ்வரியின் உறவினர்கள் புகார் அளித்திருந்தனர்.

இதில் தற்போது புதிய திருப்பமாக, புவனேஸ்வரி தான் இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது கணவரும், அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், கவுதமனை கைது செய்த பொலிசார், தலைமறைவாக உள்ள மாமியார், மாமனார், கணவரின் சகோதரிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.