நடிகை நிலானி
இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு தனி மனுஷியாக இந்த சமூகத்தில் போராடி வருகிறேன் என நடிகை நிலானி கூறியுள்ளார். காதலன் காந்தி லலித்குமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
ஆனால், கொசு மருந்து குடித்தால் கொசு கூட இறந்துபோகாது, இவர் எதற்கு அதனை குடித்தார் என சமூகவலைதளங்கள் தன்னை கிண்டல் செய்தது வருத்தமாக உள்ளது என நிலானி கூறியுள்ளார்.
மன அழுத்தத்தில், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது நான் கொசு மருந்து குடித்ததை கேவலப்படுத்தியவர்களுக்கு நன்றி. இருப்பினும் சிலர் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். நான் செய்தது தவறு கிடையாது, சூழ்நிலை சந்தர்ப்பத்தினால் இப்படி நடந்துவிட்டது என்று ஆறுதல் கூறியவர்களுக்கு நன்றி.
இந்த சமூகத்தில் எப்படி வாழப்போகிறோம் என்று பயந்துகொண்டிருந்தேன், ஏனெனில் அவமானத்தை விரும்பா நபர் நான். நான் வசதியாக மட்டும் தான் வாழவேண்டும் என நினைத்தால், நான் இப்படி போராடிக்கொண்டிருக்கமாட்டேன்.
காந்தி இறந்தது எனக்காக இருக்கலாம், ஆனால் காரணம் நான் இல்லை. என்னுடைய கணவர் எனக்கு செய்த துரோகம் தான், காந்தி லலித் குமார் மீது எனக்கு இப்படி ஒரு உணர்வை கொண்டுவந்தது. இதில், என்னுடைய தவறும் இருக்கிறது. ஒரு நல்ல தாயாக எனது குழந்தைகளை வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் விதி விளையாடிவிட்டது.
இருப்பினும், இந்த சமூகத்தில் போராடி நான் நல்லவள் என்பதை நிரூபிப்பேன், எனது குழந்தைகளை நல்லபடியாக வளர்ப்பேன் என கூறியுள்ளார்.