இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் மற்றும் வன்முறைகள் தான் அதிகமாக உள்ளது என்றால் விலங்கினங்களையும் சில மனித அரக்கர்கள் விட்டுவைப்பதில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் அரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.
அரியானா மாநிலத்தின் மேவாத் மாவட்டத்தை சேர்ந்த Aslu என்பவர் வளர்த்து வந்த ஆடு கர்ப்பிணியாக இருந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த 8 பேர், கர்ப்பிணி ஆட்டினை பாலியல் வன்புணர்வு செய்ததில் அது பரிதாபமாக உயிழந்துள்ளார்.
Savakar, Haroon, Jaffar மற்றும் 5 பேர் சேர்ந்து இந்த வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் Aslu காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது ஒரு கொடூரமான சம்பவம் என பீட்டா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Ashar தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது 1960, விலங்குகளின் சட்டம், 34, 377 மற்றும் 429 ஐபிசி, பிரிவு 11 மற்றும் (1) ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனிதர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் நகர்ந்து விலங்குகள் மீது செல்கின்றது. இதுபோன்ற சம்பவங்களுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என பீட்டா ஒருங்கிணைப்பாளர் Ashar கூறியுள்ளார்.