கர்ப்பிணி மகளை துடிதுடிக்க கொலை செய்த தாய்: பதறவைக்கும் சம்பவம்!

708

அமெரிக்காவில் பெற்ற மகளை தாய் கொடூரமாக கொலை செய்த வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கிரீனி கவுண்டியை சேர்ந்த வோண்டா ஸ்டார் ஸ்மித் என்ற பெண் தனது மகள் ஜெசி மோரிசன் (21) உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த தனது மகள் ஜெசியை கடந்த 2016-ஆம் ஆண்டு ஸ்மித் கொடூரமாக கொலை செய்துள்ளார்.பின்னர் மகளின் சடலத்தை சாலையோரத்தில் தூக்கிபோட்ட நிலையில் பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் ஸ்மித் தான் கொலையாளி என முடிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

ஸ்மித் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவர் மீதான இரண்டு கொலை வழக்குகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது.அதாவது ஜெசியுடன் சேர்த்து அவர் வயிற்றில் இருந்த கருவையும் அவர் கொன்றது உறுதியானது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஸ்மித்துக்கான தண்டனை விபரம் இனி தான் வெளியிடப்படவுள்ளது.