கல்லூரி தோழிக்கு ஆசை காட்டிய போலீஸ் அதிகாரி… நடுத்தெருவில் நின்ற காதலி : இளம் பெண்ணுக்கு நடந்த துயரம்!!

1441

ஆந்திரம்….

கள்ளக்காதலனுக்காக கணவனை விவாகரத்து செய்த பெண்கள் கள்ளக்காதலன்களால் மோசடிக்கு ஆளான சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த இரு சம்பவங்களும் ஆந்திர மாநிலத்தில் இரு வேறு மாவட்டங்களில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெனமலூரை சேர்ந்தவர் தீரா, இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர், பிடெக் படித்த தீரா நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது வகுப்பு தோழன் ஆர்.எஸ்.ஐ விசுவநாத பாலி கணேஷை சந்தித்தார். தனது வகுப்புத் தோழர் காவல்துறை அதிகாரி என்பதை கேள்விப்பட்ட அவர் கணேஷ் உடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார்.

அதேநேரத்தில் கணேஷ் தீராவுடன் நெருங்கி பழகி வந்தார். இருவரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தனர், பல இடங்களில் சந்தித்து தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்நிலையில் கணேஷ் திரா விடம் கணவனை விவாகரத்து செய்துவிட்டு வந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.

அதை கண்மூடித்தனமாக நம்பிய தீரா அவரது கணவரிடம் பிரச்சினையில் ஈடுபட்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். ஆனால் இறுதியில் கணேஷ் தீராவை கண்டுகொள்ளவே இல்லை இதனால் விரக்தி அடைந்த அவர் அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வரும் நிலையில், டிஎஸ்பி ராஜீவ் குமார், கணேஷ் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார், இதனால் அவர் மீது பலாத்காரம் மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, விரைவில் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்படுவார், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என கூறினார்.

இதேபோல் இந்தாண்டு ஏப்ரல் மாதம் ஆந்திர மாநிலம் பலநாடு மாவட்டம் தாகேபள்ளி சேர்ந்த பாத்திமா என்ற பெண்ணுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அத்தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாத்திமா அவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்,

இந்நிலையில் குராஜை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் துளசிராமன் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது, இது திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது, சட்டெனபள்ளியில் வீடு வாடகை எடுத்து அவர்கள் உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில் அவர்களது லிவிங் டு கெதர் வாழ்க்கை கசந்தது. காதலி பாத்திமாவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக கள்ளகாதலன் சந்தேகித்தார். இதனால் ஏப்ரல் 21-ஆம் தேதி பாத்திமாவுக்கும், கள்ளக்காதலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, அதில் பாத்திமாவின் கழுத்தை கள்ளக்காதல் அறுத்துவிட்டு தப்பி ஓடினார். பொதுமக்கள் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.