கன்னியாகுமரி….

கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுமணி பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் நிதிஷ் (28). இவர் யூனியன் பாலிடெக்கனிக்கல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நிதிஷ் பெற்றோரிடம் சண்டையிட்டுவிட்டு கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் நிதிஷை பெற்றோர் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடி வந்தனர், எங்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இன்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை அருகே பேண்ட் சர்ட் ஷூ அணிந்த நிலையில் ஆண் உடல் மிதந்ததை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த குழித்துறை தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு கரைசேர்த்த போது அந்த உடல் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன நிதிஷ் உடல் என்பது தெரியவந்தது. உடனே பெற்றோரை வரவழைத்து அடையாளம் காணப்பட்டது.

இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் மார்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.